Sports


மேடையில் அதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதி. ஆளைவிட்டால் போதும் என்று ஓடிய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால்.

லோக்சபா எம்.பி தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியின் சார்பாக பார்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு வாய்ப்பு அளிப்பதாக, அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார். ஆனால் அதை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் 'எஸ்கேப்' ஆனார் சாய்னா நெஹ்வால்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியி்ல் உள்ள தனியார் பல்கலை கழகம் சார்பாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் பாட்மிண்டன் வீரங்கனை சாய்னா நெஹ்வால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ககன் நரங், விஜய் குமார், மல்யுத்த வீரர்கள் யோகேஷ்வர் தத், சுஷில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் 6 பேருக்கும் பல்கலை கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசிய போது, அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டார்.
விழாவில் அவர் கூறியதாவது,
பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சாய்னா நெஹ்வால், வாழ்க்கையில் சகல வளமும் பெற எனது வாழ்த்துக்கள். சமாஜ்வாடி கட்சியின் சார்பாக சாய்னாவிற்கு, அலிகார் தொகுதியில் எம்.பி. பதவிக்கு போட்டிட சீட் வழங்க தயாராக உள்ளோம். அவர் விரும்பினால் கட்சியின் சார்பாக போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிட கிடைக்கும் சீட் அவருக்கு கிடைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்றார்.
டாக்டர் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் பேசிய சாய்னா நெஹ்வால், முலாயம் சிங் யாதவ் அளித்த வாய்ப்பிற்கு நன்றி கூறினார். ஆனால் அதற்கு பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் சாய்னா கூறியதாவது,
நான் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று எனது தந்தை கனவு கண்டார். ஆனால் நான் விளையாட்டு துறைக்கு வந்துவிட்டதால், அவரது கனவு பலியாக்காமல் போகும் நிலை உருவானது. ஆனால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று, கெளரவ டாக்டர் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது தந்தையின் கனவு இன்று நினைவாகி உள்ளது என்றார்.
தற்போது 22 வயதை எட்டியுள்ள சாய்னா நெஹ்வால், சமாஜ்வாடி கட்சி அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட விரும்பினாலும் முடியாது. ஏனெனில் லோக்சபா எம்.பி.தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
பாட்மிண்டன் போட்டியில் நெட்டிற்கு அப்பால் ஷெட்டிலை அனுப்ப தெரிந்த சாய்னா, முலாயம் சிங் யாதவ் வீசிய அரசியல் வலைக்கும் தப்பிவிட்டாரே! பலே சாய்னா!

இந்தியா இங்கிலாந்தில் வைட் வாஷ் எதிரொலி.. நாம் அனுபவித்த தோல்வியின் வலியை இங்கிலாந்தும் உணர வேண்டும்: ரெய்னா

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை முழுமையாக இழுந்த போது நாங்கள் அனுபவித்த வலியை, இங்கிலாந்து அணி தற்போது உணர வேண்டும் என்று இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று ஆடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த போது பெற்ற வலியை, அந்த அணியும் உணர வேண்டும் என்று இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று போது நானும் இந்திய அணியில் இருந்தேன். அங்கு 0-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்த போது இந்திய அணிக்கு ஏற்பட்ட வலியை நானும் உணர்ந்தேன்.
டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் எஸ்.ஜி மற்றும் டியூக் ஆகிய இரு வகை பந்துகளுக்கும் இடையே அதிக வித்தியாசம் உண்டு. இந்திய அணியில் உள்ள ஜாகிர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு, எஸ்.ஜி டெஸ்ட் பந்துகளை பயன்படுத்தி, ரிவர்ஸ் சிவீங் வீச தெரியும்.
மேலும் அஸ்வினும், பிரக்யன் ஓஜா ஆகியோர் சுழல்பந்துவீசில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை பந்துவீச்சாளர்களான ஸ்டீவ் பின், ஸ்டூவர்ட் போர்டு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர், எஸ்.ஜி பந்துகளை எப்படி பயன்படுத்த உள்ளார்கள் என்பதை பொறுத்தே நமது வெற்றி தீர்மானிக்கப்படும்.
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டார்சஸ் ஓய்வு பெற்றது பெரிய இழப்பாக இருந்தாலும், பார்மில் உள்ள கெவின் பீட்டர்சன் அணிக்கு திரும்பி இருப்பது பக்கபலம்.
நோயின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள யுவராஜ் சிங், தற்போது இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். அவர் எனக்கும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த மாதிரியாக உள்ளார். டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் பார்க்க நான் விரும்புகிறேன்.
அதே நேரத்தில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவும் விரும்புகிறேன். ஆனால் இந்திய அணியில் 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அது அணி தேர்வு குழுவின் முடிவை பொருத்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டிகளில் நான் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தால் மட்டுமே, இந்திய அணியில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும் என்றார்.


பாராட்டி வழங்கிய பரிசை எல்லாம் திருப்பி கேக்குறாங்க.. ஊக்க மருந்து விவகாரமும், சைக்கிள் வீரர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ரூ.12 கோடியும்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர் ஆர்ம்ஸ்ட்ராங். இவர் சமீபத்தில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கினார். இதனால் அவருக்கு போட்டிகளில் பங்கேற்க ஆயுள் கால தடை விதித்து சர்வதேச சைக்கிள் பந்தய அமைப்பு (யு.சி.ஐ) நடவடிக்கை எடுத்தது. 
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை `டீ பிரான்ஸ்' பந்தயத்தில் பெற்ற 7 பதக்கங்களையும் பறித்துக்கொண்டது. இதற்கிடையே அமெரிக்காவின் இன்சூரன்ஸ் நிறுவனமும் ஆர்ம்ஸ்ட்ராங் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனம், ஆர்ம்ஸ்ட்ராங்கை பாராட்டி அவருக்கு ரூ.12 கோடி பரிசு வழங்கி இருந்தது. அந்த தொகையை திருப்பித்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2005-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது தவறான தகவல்களை ஆர்ம்ஸ்ட்ராங் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே அர் மீது மோசடி குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இது தொடர்பாக ஆர்ம்ஸ்ட் ராங்குக்கு அமெரிக்க காப்பீடு நிறுவனமான தலாஸ் கடிதம் எழுதியுள்ளது.



கண்டி கிரிக்கட் ரசிகர்களுக்கு திடீர் அதிஷ்டம்.2ம் மற்றும் 3வது ஒருநாள் போட்டிகள் பல்லேகலேவிற்கு மாற்றப்பட்டது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த 2ம் மற்றும் 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 4ம் 6ம் திகதிகளில் இவ்விரு போட்டிகளும் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக