Technical


ஆண்ராய்டு பாவனையாளர்களுக்கு.. போனில் கலக்கும் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்.

ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.

stick cricket
கிரிக்கெட் கேம்ஸ்களில் முக்கியமானது Stick Cricket. அதன் எளிமை, வேகம், அழகான கிராபிக்ஸ், அனிமாசன் அசத்தல். 5 Over All Star Slogகில் இந்த ஆட்டத்தை எளிமையாக கற்றுக்கொள்ளலாம். World Domination லெவலில் மூன்று ஆட்டம் இலவசமாக கிடைக்கிறது. 20 ஓவருக்குள் உங்கள் இலக்கை அடையவேண்டும். $2.4 கட்டி pro வர்சன் பெற்றுவிட்டால் கிழே உள்ள அனைத்தும் கிடைக்கும்.
* 10 over All Star Slog
* 20 over All Star Slog
* All 14 levels of World Domination
* A further 5 exclusive achievements
* Stick Cricket® World Cup Edition*
* Stick Cricket® Premier League*
அடுத்து Cricket T20 Fever 3D,
 
 
 
 
 
 
 
இது ஒரு முழுமையான 3D கிராபிக்ஸ் விளையாட்டு. தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற கேமரா வியுவில் விளையாடலாம். உங்களுடைய ஷாட்டுக்கும், விக்கெட்க்கும் cheerleaders டான்சும் உண்டு. இதில் Quick Match, ODI,T 20 என்று அனைத்தும் கிடைக்கும்.

Cricket T20 Fever 3D
 
அடுத்து World Cricket Championship
 
இதில் World Cricket Championship, World Premiere League, Fantasy Cricket League என்று மூன்று கேம்ஸ் கிடைக்கிறது. 5 ஓவர் வரை விளையாடலாம். பாட்டிங், பீல்டிங் என்று உங்கள் விருப்பமானதை தேர்வு செய்துக்கொள்ளலாம். உங்கள் விருப்பபடி டீம் தேர்வு செய்யும் வசதி உள்ளது. $3 பணம் கட்டினால் 30 ஓவர்வரை விளையாடலாம்.
 
 
இந்த மாதம் 6ம் தேதி Stick Cricket Super Sixes என்ற புதிய கேம் அறிமுக படுத்திஇருக்கிறார்கள். stick cricket விளையாடி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இது இருக்கும்.


cricket
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஒவ்வொரு ஓவருக்கும் புதிய புதிய முறைகள், அடுத்தடுத்து ஓவர்களின் மாற்றங்கள், அசத்தல் கிராபிக்ஸ் ஈசியாக சிக்ஸ் அடிக்க முடிகிறது. மிஷின் மூலமாக பந்து வீசபடுகிறது. ஆண்ராய்டு போன் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக விளையாடி பாருங்கள்.

Stick Cricket Super Sixes

 
அக்டோபர் 30ம் தேதி Hit Wicket Cricket வெளியிடப்பட்டது. இதில் உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்துகொள்ளலாம். 5,10 T20 ஓவர் விளையாட்டுகள் உள்ளது.  Friendly, Invitational, World Cup, and Head-to-Head போன்றவற்றை தேர்வு செய்து விளையாடலாம்.


சந்தையில் சக்கைபோடும் விண்டோஸ் 8 இன் சிறப்புகள் இவைதான்.


புதிய முறையில் இயங்கி, எதிர்பாராத வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, இதுவரை சந்திக்காத அல்லது பழக்கத்தில் உள்ளவற்றில், வேறுபாடான சிறப்புகள் என்ன?
குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக் கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் ஆகியன விடுத்து, மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.
1. உடன் இணைந்து வரும் ஆண்ட்டி வைரஸ்:
விண் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது. Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது. நாம் இதற்கென தனியாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று வாங்கி, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
2. பேட்டரி பேக் அப், ஸ்பீட் பூட் அப்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மிக வேகமாக பூட் ஆகும்படி அமைக்கப்பட்டுள்ளன. (கிட்டத்தட்ட 8 செக்கன்களில் உங்கள் கம்ப்யுட்டர் ரெடி.)மற்ற எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் இதனுடன் ஒப்பிட்டு இந்த வேகத்தினைத் தெரிந்து கொள்ளலாம். 
மேலும், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, உடன் இயங்கும் ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலை, நாம் டாஸ்க் மேனேஜர் திறந்து சரி செய்திடலாம். அதே போல, கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியைப் பல வழிகளில் செட் செய்து, தேவையற்ற நிலையில், மின்சக்தியைக் குறைக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனால், லேப்டாப் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களில், டேப்ளட் பிசிக்களில், மின்சக்தி பயன்பாடு சிக்கனமாகிறது.
3.எளிதான விண்டோஸ் 8 அப்டேட்:
சிஸ்டத்தின் இயக்க பைல்கள் அப்டேட் செய்யப்படுகையில், தானாகவும், எளிதாகவும் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படி தானாக, சிஸ்டம் அப்டேட் பைல்களை மேம்படுத்திக் கொள்கிறதோ, அதே போல, மேம்படுத்திக் கொள்ளலாம். 
டேப்ளட் பிசிக்களை, Wifiஇணைப்பு கிடைக்கும் இடங்களில் இயங்கி, இந்த அப்டேட் செயல்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் மட்டுமின்றி, அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான பைல்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. மேலும், புதிய வசதிகள் தரும் வகையில் பைல்கள் வெளியிடப்பட்டாலும், அவையும் சிஸ்டத்தில் தானாகப் பதியப் படுகின்றன.
4. விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
விண்டோஸ் 8 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், மற்ற மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இயங்குகின்றன. கம்ப்யூட்டர் ஒன்றில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இவற்றின் செயல்பாடுகள் உள்ளன.
தொடக்கத்திலேயே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், 11 அப்ளிகேஷன் புரோகிராம்களை மொத்தமாக ஒரு கூட்டு புரோகிராம் போலத் தந்துள்ளது. இவற்றின் மூலம் சமுதாய தளங்கள், மேப்கள், மெயில் அப்ளிகேஷன்,செய்தி தகவல்கள் வசதி மற்றும் பல வசதிகள் மொத்தமாகக் கிடைக்கின்றன
இந்த வகையில் விண்டோஸ் 8 சிஸ்டம் ஒன்றுதான், கம்ப்யூட்டர்களிலும், மொபைல் சாதனங்களிலும் ஒரே மாதிரியாக இயங்கும் தன்மை கொண்ட சிஸ்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
5. பெர்சனல் கம்ப்யூட்டரில் மொபைல் கேம்ஸ்:
மொபைல் போன்கள் வந்த பின்னர், கேம்ஸ் விளையாடுவோர், கம்ப்யூட்டர்களை அவ்வளவாக நாடுவதில்லை. கையடக்க சாதனத்தில், அனைத்து வசதிகளோடும் விளையாடும் சுகத்தினை அனுபவித்து வருகின்றனர். அதனாலேயே, கேம்ஸ் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், மொபைல் போன்களில் இயங்கும் வகையிலேயே கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்து வருகின்றனர். 
ஆனால், விண்டோஸ் 8 மூலம், அந்த மொபைல் சாதனத்தில் இயங்கும் கேம்ஸ் அனைத்தும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பிசிக்கள் அல்லது அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களில் கிடைக்கின்றன. 
6. விண்டோஸ் 8 சார்ம்ஸ்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்குகையில் , நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ட்யூன் அப் விஷயங்களை (search, share, start, devices, and PC settings) சார்ம்ஸ் பார் என்னும் பகுதியில் வைத்து இயக்கலாம். 
ஒரே ஒரு தொடல் மூலம் இவை உங்களுக்கு இயங்கி உங்கள் கட்டளைக்காகக் காத்து நிற்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷன் அல்லது புரோகிராமினை இயக்கிக் கொண்டிருந்தாலும், இந்த செட்டிங்ஸ் நுட்பங்கள் அனைத்தையும், ஒரே ஒரு தொடல் மூலம் இயக்கலாம். 
7. பைல் எக்ஸ்புளோரர்:
முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், இதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைத்து வந்தோம். இதில் தற்போது ஒரு ரிப்பன் இணைக்கப்பட்டுள்ளது. பைல்கள் குறித்த தகவல் பக்கத்தில், பைல்களைப் பற்றிய கூடுதல் புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன. 
ஒரு பைலை மாற்றிக் கொண்டிருக்கையில், அதனைச் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கலாம். பைலை Copy செய்கையில் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்னைக்கும் தீர்வு தயாராகத் தரப்படுகிறது. இதுவரை நாம் பைல்களைக் கையாண்ட வழிகளுக்கும் மேலாகப் பல வசதிகள் இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன. 
8. புதிய மீட்பு (recovery) வழிகள்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய மீட்பு வழிகள் தரப்பட்டுள்ளன. அவை Refresh மற்றும் Reset ஆகும். சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, சற்று முடக்கப்படுகையில், ‘Refresh’ அனைத்து விண்டோஸ் பைல்களையும், அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கிறது.
அதே நேரத்தில், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அப்படியே இருந்த நிலையில் வைக்கிறது. ஆனால், ‘Reset’ கம்ப்யூட்டரை அதன் பேக்டரி நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அதாவது புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலைக்கு மாற்றி அமைக்கிறது. மீண்டும் விண்டோஸ் 8 சிஸ்டம் ரீஇன்ஸ்டால் என்ற முறையில் அமைக்க, உங்களுக்கு மீடியா சிஸ்டம் டிஸ்க் தேவையில்லை. 
விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் பல புதிய வசதிகளை, இயக்கத்தினைத் தருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் அனுபவத்தினை முற்றிலும் புதிய முறையில் மாற்றித் தர வேண்டும் என்ற நோக்குடன் மைக்ரோசாப்ட் இயங்கி, இந்த சிஸ்டம் மூலமாக வெற்றியும் பெற்றுள்ளது.

அடுத்த கட்டத்துக்கு போன ஏ.டி.எம். தொழில் நுட்பம். பணம் மற்றும் செக்கை படித்து அக்கவுண்டில் சேர்க்கிறது.

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வியக்கவைக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த இந்த வகையை சேர்ந்த புதுமையான 40 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கிறது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம், செக் போன்றவற்றை போட்டால் உடனடியாக அதை நமது வங்கி கணக்கில் சேர்த்து விடும்.
இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு முடிவுக்குள் மேலும் 150 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவப்போவதாக வங்கியின் பொது மேலாளர் மைக்கேல் சாந்த் கூறினார்.
மேலும் அவர் இதன் செயல்பாடு குறித்து கூறுகையில், நாணயம், பணம் ஆகியவற்றை எண்ணிப்பார்ப்பதுடன், செக் போன்றவற்றை படித்து பார்த்து அவற்றை உரிய கணக்கில் உடனே சேர்க்கும் திறன் படைத்தது என்கிறார்.
அங்குள்ள மற்றொரு தனியார் வங்கியும் இது போன்ற 800 ஏ.டி.எம். எந்திரங்களை இந்த நிதியாண்டு இறுதிக்குள் அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.


ஆரம்பமானது தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் அப்பிளின் சரிவு.
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை. அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால்,
ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தமையினால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு.
ஐ.ஓ.எஸ். 6 இயங்குதளத்தில் கூகுள் மெப்ஸ்க்குப்  பதிலாக அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசனை உபயோகித்தது அந்நிறுவனம். எனினும் அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசன் சரிவர இயங்காமல் ஏகப்பட்ட குழப்பங்களை உண்டாக்கியது.

 பலரின் விமர்சனத்துக்குள்ளாகிய மெப் விவகாரம் இறுதியில் அப்பிளின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி டிம் குக் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மனிப்புப்புக் கோரும் வரை சென்றது.
இதேபோல் 'சைரி' எனப்படும் குரல்கட்டளைக்கு இணங்க செயற்படும் அப்ளிகேசனில் காணப்பட்ட குறைபாடுகள் அதனால் ஏற்பட்ட சர்ச்சை என முன் எப்போதும் இல்லாதவாறான பல பிரச்சினைகளுக்கு அப்பிள் முகங்கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க மறு பக்கத்தில் செம்சுங் அதிரடியாக விற்பனையில் சாதித்து வருவாயைப் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களின் ஊடாக அறிக்கை விட்டுக்கொண்டுள்ளது.
இதுவும் அப்பிளுக்குத் தலையிடியாக மாற மறுபக்கத்தில் கூகுள் நெக்ஸஸ் டெப்லட்டை வெளியிட்டு ஐபேட்டின் சந்தையை சரிக்க மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு எத்திசையில் திரும்பினாலும் பிரச்சினை, சர்ச்சை, சந்தையை இழக்கும் அபாயம் என நிஜத்திலும் ஆடித்தான் போயுள்ளது அப்பிள்.
இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல புதிய அடியொன்றும் அப்பிளுக்கு விழுந்துள்ளது.
ஆம், அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உப தலைவரான ஸ்கொட் போர்ஸ்டோல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அப்பிள் அறிவித்துள்ளது.
ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் அப்பிளின் மெப் மற்றும் சைரி ஆகியவற்றால் தோன்றிய குழப்பத்தின் காரணமாக நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே இவர் பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிளின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸூடன் நெருங்கிய உறவைப் பேணிவந்த ஸ்கொட் போர்ஸ்டோல் நிறுவனத்தினுள் சற்று சர்ச்சைக்குரிய நபராகவே திகழ்ந்துள்ளார்.
இவர் 'divisive figure who "never'' fit into the culture at Apple' என அதிகமாக வர்ணிக்கப்படுகின்றார்.
அடுத்தவருடம் பதவி விலகவுள்ள இவர் டிம் குக்குக்கு ஆலோசகராக செயற்படுவார் எனவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை அவர் அப்பிளை விட்டு வெளியேறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கொட் போர்ஸ்டோல் சுமார் 15 வருடங்களாக அப்பிளில் பணியாற்றி வருவதுடன் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகவும் திகழ்கின்றார்.
இதேவேளை அப்பிளின் சில்லறை வர்த்தகப்பிரிவின் தலைவராக செயற்பட்டவருமான ஜோன் பிரோவெட்டும் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் இத்தகைய பெரிய இரண்டு பதவிகள் வெற்றிடமாவது இதுவே முதன்முறையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸின் மறைவுக்குப் பின்னர் அப்பிளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இதனைக் கருதமுடியும்.
ஸ்டீவ் விட்டுப் போன இடத்தை குக்கினால் நிரப்ப முடியுமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் எழுந்தது. எனினும் சிறிது காலத்துக்கு சிறப்பாக செயற்பட்ட அவர் தற்போது சறுக்கத் தொடங்கியுள்ளதாக எண்ணத்தோன்றுகின்றது.
இதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களே சிறந்த உதாரணங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக