செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஹலால் சான்றிதழ் பற்றி  Neth FM  இல் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சித் தொகுப்பு  ( බෙලුම්ගල )


வியாழன், 17 ஜனவரி, 2013

ரிசானா நபீகிட்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அவரது குடும்பத்தின் நிலையும் (வீடியோ இணைப்பு )



சனி, 5 ஜனவரி, 2013


துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி களனி பிரதேசசபை உறுப்பினர் ஹசித மடவெல மரணம்
துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி களனி பிரதேசசபை உறுப்பினர் ஹசித மடவெல மரணம்


களனி பிரதேசசபை உறுப்பினர் ஹசிந்த மடவெல இனந் தெரியாதோரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் அதிகரிப்பு


12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று (05) நள்ளிரவு முதல் அமுளுக்குவரவுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,396 ரூபா ஆகும்.
 

வியாழன், 3 ஜனவரி, 2013


லஞ்சம் பெற்ற சுங்க தடுப்பு பிரிவு தலைமை இயக்குநர் கைது

லஞ்சம் பெற்ற சுங்க தடுப்பு பிரிவு தலைமை இயக்குநர் கைது


ஒரு மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாகப் பெற்ற சுங்க தடுப்பு பிரிவு தலைமை இயக்குநர் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

செவ்வாய், 1 ஜனவரி, 2013


ACJU ஹலால் ,ஹராம் பற்றிய கலந்துரையாடல்

2013ம் ஆண்டினை வரவேற்ற 702 பேர் வைத்தியசாலையில்



திடீர் விபத்து காரணமாக கடந்த 48 மணித்தியாலங்களில் 702 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். 
2013ம் ஆண்டினை வரவேற்ற 702 பேர் வைத்தியசாலையில்


இவர்களில் 204 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் பண்டிகை காலத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த வருடம் வெளிநோயாளர் பிரிவில் 598 பேர் சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 498 பேரே சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் இதன்மூலம் 17 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் 219 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றதாகவும் இவ்வருடம் 204 பேரே தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதாகவும் இதன்மூலம் 7 சதவீத வீழ்ச்சி காணப்படுவதாகவும் வைத்தியர் பிரசாத் ஆரியவங்ச குறிப்பிட்டார்.