வெள்ளி, 23 நவம்பர், 2012


கொழும்பு - பதுளை இரவு தபால் ரயிலில் மர்ம மரண சடலம்

கொழும்பு - பதுளை இரவு தபால் ரயிலில் மர்ம மரண சடலம்


.கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த ரயில் இன்று (23) அதிகாலை பதுளை ரயில் நிலையத்தை சென்றடைந்ததும் அதிகாரிகள் ரயிலை சோதனை செய்துள்ளனர். 

அதன்போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக