மாணவர்கள் இணைந்துகொள்வதில் வீழ்ச்சி - இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சு
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் இணைந்துக்கொள்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
குறித்த நிறுவனங்களில் காணப்படுகின்ற வசதிகளுக்கு ஏற்றவாறு மாணவர்கள் இணைந்துக்கொள்வதில்லை என அமைச்சின் செயலாளர் கே.ஏ.திலகரட்ண தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்வி திணைக்களத்தின் கீழ் 28 பொறியியல் கல்லூரிகளும், ஒன்பது தொழில்நுட்ப கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ள நிலையில், அதன் ஊடாக பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பொறியியல் பாடநெறிக்கு இணைத்துக்கொள்ளக்கூடிய மாணவர்கள் தொகையை விட குறைந்தளவான மாணவர்களே இந்த பாடநெறியை பயில்வதற்கு இணைந்துக்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கான பாடநெறியை சிறந்த முறையில் பயின்று தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில் மாணவர்களிடம் இருந்து போதியளவில் ஆர்வம் காணப்படவில்லை என அமைச்சின் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக