ஞாயிறு, 28 அக்டோபர், 2012


ஸ்டீவ் ஜொப்ஸ் கடுமையாக எதிர்த்த ஐ பேட் மினி நேற்று வெளியானது. ஐ பேட் 4 வும் வெளியானது. (படங்கள்)

தொழில்நுட்ப உலகின் மொத்தக் கவனமும் நேற்று அப்பிளின் பக்கமே திரும்பியிருந்தது.
இதற்கான காரணம் நீண்டகாலமாக அப்பிள் வெளியிடப்போவதாகக் கூறப்பட்டு வந்த ஐ பேட் மினி நேற்று அறிமுகப்படுத்தப்படுமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டமையாகும்.
அப்பிள் மினி! அப்பிள் மினி! என எங்கு பார்த்தாலும் அப்பிளின் சிறிய அளவிலான டெப்லட் பற்றியே பேச்சாக இருந்தது.
ஆனால் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் வகையில் ஐபேட் மினிக்கு மேலதிகமாக ஐ பேட் 4 வினையும் அப்பிள் நேற்று அறிமுகப்படுத்தியது.
மேலும் புதிய மெக்புக், மெக் மினி, மெல்லிய ஐமெக் கணனி ஆகியவற்றையும் அப்பிள் குறித்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
எனினும் ஐபேட் மினி மற்றும் ஐபேட் 4 ஆகியன மட்டுமே அனைவரையும் தம்பக்கம் ஈர்த்தவை
பல எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்பிளின் ஐபேட் டெப்லட் கணனிகளை விடத் தோற்றத்தில் சற்று சிறியது.
ஐபேட் மினியானது 7.9 அங்குல திரையைக் கொண்டுள்ளது. அத்துடன் 7.2 மில்லி மீற்றர் தடிப்பமானது.
இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது
திரை : LED-backlit IPS LCD capacitive touchscreen, 16M colors 768 x 1024 pixels படவணு அடர்த்தி 162 ppi ஆகும்.
நினைவகம் : 16/32/64 GB அளவுகளில் கிடைக்கின்றது மற்றும் 512 MB RAM, 
தரவு வேகம்: DC-HSDPA, 42 Mbps; HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 100 Mbps; Rev. A, up to 3.1 Mbps
கெமரா: 5 மெகா பிக்ஸல் (2592x1944 pixels)
இயங்குதளம்: அப்பிளின் iOS 6
சி.பி.யூ.: Dual-core 1 GHz Cortex-A9 ( Apple A5 Chipset) 
ஜி.பி.யூ.: PowerVR SGX543MP2
இதனை நீங்கள் ஏன் வாங்கலாம்?
1. ஐ பேட்டினை விட அளவில் சிறியது.
2. அப்பிளை விரும்புபவர்கள் அதேவேளை ஐபேட் விலை சற்று அதிகம் என நினைப்பவர்கள் இதன் விலை ஒப்பீட்டளவில் குறைவானதென்பதால் ( ஆரம்ப விலை $329) இதனைக் கொள்வனவு செய்யலாம்.
3. வேகமான செயற்பாட்டுக்குகந்தது. (Dual-core 1 GHz Cortex-A9 , Apple A5 Chipset) 
4. சந்தையில் உள்ள சிறிய டெப்லட்களை விட சற்றுப் பெரிய திரை.
இதனை வாங்குவதை ஏன் தவிர்க்கலாம்?
1. ஐ பேட்டினை விட அளவு சிறிது என்றபோதிலும் , மின்னஞ்சல்களை டைப் செய்யவோ, மற்றைய செயற்பாடுகளுக்கோ இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டும். சிறியதென்ற போதிலும் பெரிய அளவில் மாற்றமில்லை.
எனவே பாவனையாளர்கள் ஐபேட் 2, ஐபேட் 3 அல்லது நேற்று வெளியிடப்பட்ட ஐபேட் 4 வையே கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டலாம்.
2. இதன் ஆரம்ப விலை $329, இது வை-பை மூலமே இயங்கும் 16 ஜிபி மொடலின் விலையாகும் ஆனால் 32 ஜி.பி. மாதிரியின் விலை 429 அமெரிக்க டொலர் என்பதுடன் 32 ஜி.பி. இன் விலை $529 ஆகும்
வை-பை மற்றும் புரோட்பேன் வசதியைக் கொண்ட ஐபேட் மினியொன்றின் ஆரம்ப விலை 459$ ஆகும். வை-பை மற்றும் புரோட்பேன் 64 ஜிபி வேர்சனின் விலை 659 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இது சந்தையில் போட்டியாளர்களின் டெப்லட்களை விட மிக அதிகமாகும். 
3. ஐபேட் டெப்லட்கள் அதி துல்லியமான ரெட்டினா திரையைக் கொண்டுள்ள போதிலும் மினியானது அத்திரையைக் கொண்டதல்ல.
ஐபேட் மினி மற்றும் சந்தையிலுள்ள மற்றைய டெப்லட்களுடன் சிறிய ஒப்பீடு
ஐபேட் மினி அதாவது ஐபேட்டின் சிறியது என இதனைக் கூறலாம். சிறிய அளவிலான டெப்லட்டினை வெளியிடுவதனை அப்பிளின் மறைந்த ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் கடுமையாக எதிர்த்தார். 
ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் அப்பிள் இதனை வெளியிட்டுள்ளது. இதே நிகழ்விலேயே ஐ பேட் 4 வையும் அப்பிள் வெளியிட்டுள்ளது.
அப்பிள் இதுவரை மொத்தம் 100 மில்லியன் ஐபேட்களை விற்பனை செய்துள்ளதாக நேற்று அறிவித்தது. ஐபேட்டுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இதனையும் ஏன் வெளியிட்டது எனப் பார்க்கும் போது பல காரணங்கள் வெளிப்படுகின்றன.
குறிப்பாக தற்போது சந்தையில் குறைந்த விலையில் விற்பனையாகும் கூகுள் நெக்ஸஸ், அமேசன் கைண்டல் பயர் ஆகியன அப்பிளுக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளன.
இவை வேகமாக விற்பனையாகி வருகின்றமையானது தனது ஐபேட்டின் சந்தையை வெகுவாகப் பாதிக்குமென அப்பிள் கருதுகின்றது.
அதனால் இவற்றை எவ்வாறாவது கட்டுப்படுத்த அப்பிளுக்கு ஓர் உற்பத்தி தேவையாக இருந்தது.
மேலும் கூகுள் நெக்ஸஸ், அமேசன் கைண்டல் பயர் ஆகியன ஐபேட்டினை விடத் தோற்றத்தில் சிறியன. எனவே பாவனையாளர்கள் பாவிப்பதற்கு இலகுவான டெப்லட்டின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளமையும் அப்பிளுக்கு சிக்கலாக மாறியது.
இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டே அப்பிள் ஐபேட் மினியை வெளியிட்டுள்ளது. 
டெப்லட் சந்தையில் தனது ஆதிக்கத்தினை அதிகரித்து ஏகபோக உரிமையாளராகத் தன்னை மாற்றிக்கொள்ளும் பொருட்டே அப்பிள் ஐ பேட் மினியை வெளியிட்டுள்ளதாகத் தெரிகின்றது. 
எனினும் அப்பிள் போட்ட கணக்கு சரியானதா? ஏனெனில் ஐபேட் மினியின் விலையை நாம் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. போட்டியாளர்களின் உற்பத்திகள் இதைவிட விலை குறைவாக உள்ளன.
தோற்றமும் போட்டியாளர்களை விடப் பெரியதாகவே உள்ளது. எனவே ஐபேட் மினி சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுமா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யாரும் எதிர்பார்க்காத, எந்த ஊடகமும் எதிர்வுகூறாத அப்பிள் சாதனமொன்று அண்மையில் வெளியாகியது என்றால் அது இதுதான். ஏனெனில் ஐபேட் மினிக்கான நிகழ்வில் ஐபேட் 4 வும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்பிளின் நிகழ்வுக்குச் சென்றிருந்த எந்தவொரு ஊடகமும் இவ் ஆனந்த அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. எந்தவொரு ஊடகமும் இது தொடர்பில் எதிர்வுகூறவும் இல்லை.
அப்பிள் தயாரிப்புகள் வெளியாகும் முன்னரே எவ்வாறாவது அது தொடர்பில் பொதுவாக ஊடகங்களே செய்திகள், புகைப்படங்களை வெளியிட்டு அப்பிளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.
ஆனால் இம்முறை மாறாக எதிர்பார்க்காத ஒன்றை வெளியிட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்து விட்டது.அதுதான் அப்பிள் ஸ்டைல் என அனைவரையும் புருவத்தினை உயர்த்த வைத்து விட்டது.
ஐபேட் 4 ஆனது 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டுள்ளது. மேலும் ஐபேட் 3 இனை விட இருமடங்கு வேகமான செயற்பாட்டினை வழங்கும் A6X சிப்பினை கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் 
Dual-core 1 GHz Cortex-A9 CPU
A6X processor - doubles the performance and graphics
Next generation ISP (image stabilization processor)
10hour battery life
FaceTime HD camera - 720p
LTE expanded coverage
WiFi 802.11n - 2x faster
5 MP, 2592 x 1944 pixels, autofocus கெமரா ஆகியனவற்றையும் கொண்டுள்ளது.
அப்பிள் விசிறிகளுக்கு ஐபேட் 4 வெளியிடப்பட்டமையானது மகிழ்ச்சிகரமானதென்ற போதிலும் இதனால் கவலையடைந்த ஒரு சாராரும் இருக்கவே செய்கின்றனர்.
அவர்கள் வேறு யாரும் அல்லர். ஐபேட் 3 பாவனையாளர்களே .காரணம் ஐபேட் 3 ஆனது இவ்வருட ஆரம்பத்திலேயே வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறுகிய காலப்பகுதிக்குள் புதிய மாதிரியொன்று வெளியிடப்பட்டுள்ளமையானது ஐபேட் 3 யினைப் பழைய மொடலாக மாற்றியுள்ளது.
மேலும் ஐபேட் 4 இன் விலையும் ஐபேட் 3 இன் விலைக்கு ஒத்ததாகவே உள்ளது. ஆனாலும் இருமடங்கு வேகமான செயற்பாட்டை அளிக்கவல்லது என அப்பிள் தெரிவிக்கின்றது. 
ஐபேட் 4 வின் வருகையுடன் சந்தையில் நுகர்வோருக்கான தெரிவு அதிகமாகியுள்ளது. இதனுடன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டி அதிகமாகியுள்ளது.
இதனால் டெப்லட்களின் விலை குறைவதுடன் தரமும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. இதனால் நன்மை அடையப் போவது நுகர்வோரே.
iPad Mini Photos 
<br />
 Apple senior vice president of worldwide marketing Philip Schiller introduces the new iPad mini during an Apple event in San Jose, California October 23, 2012. <br />

mac mini Photos
i Pad 4 Photos

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக