டுபாயில் மாளிகைகளுக்குள் புகுந்து 600,000 திர்ஹாம் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கையர்.
டுபாயில் மாளிகைகளுக்குள் புகுந்து 600,000 திர்ஹாம் (டுபாய் பணம்) பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.thenational.ae/news/uae-news/courts/villa-burglar-steals-more-than-dh600-000-hears-dubai-court
இவர்கள் ஒரு மாளிகையில் 3,500 திர்ஹாம் பெறுமதியான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக டுபாய் குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் சாரதி எனவும் மற்றைய நபர் 26 வயதுடைய இலங்கை அலுவலக உத்தியோகத்தர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளை மாத்திரமன்றி மடிக்கணினியையும் இவர்கள் களவாடியுள்ளனர்.
களவாடப்பட்ட பொருட்கள் சிலவற்றை டுபாய் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விடுதியில் இருந்து மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொள்ளை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 26ம் திகதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக