மடவளையை சோகத்தில் மூழ்க வைத்த மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய தாய் மற்றும் மகளின் ஜனாஸா சம்பவம். (படங்கள் இணைப்பு)
மடவளை பஸார், திக்கின்ன பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி தாய் மற்றும் மகள் வபாத்தான நிகழ்வு மடவளை மக்களை அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது..
மடவளை New City Plaza இர்பான் (மடவளை சந்தி தக்கியா அருகில் வசிப்பவர்) அவரின் மனைவி பாத்திமா சிப்னா மற்றும் மாமியார் பத்ருன் நிஸா ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.
நேற்று காலை இர்பான் அவர்களின் மாமியார் இவர்களின் வீட்டின் வெளிப்பக்க சுவரில் துணிகளை காயப்போடுவதற்கு ஆணியொன்றை அடித்து அதில் இரும்புக் கம்பியை கட்டியுள்ளார். (படத்தில் உள்ளபடி) பின்னர் அதன் மறுபக்கத்தை மின்சார மீட்டரின் பின்பக்கத்தில் கட்ட எத்தனித்த போது மின்கசிவு ஏற்பட்டு இவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இவரின் கையில் கொடிக்கம்பி சுற்றியிருந்ததால் உடனடியாக இவரால் அதிலிருந்து விடுபட முடியாமல் கீழே விழுந்துள்ளார்.
அப்போது இவரை தூக்குவதற்கு அங்கு வந்த இர்பான் அவர்களின் மனைவி சிப்னாவும் மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதன்போது அவரின் சகோதரியின் 7 வயது பிள்ளை கம்பியை தொட்டு மின் தாக்குதலுக்கு உள்ளாக மூவரும் உடனடியாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எமக்கு கிடைத்த தகவல்களின் படி, மின்சாரம் தாக்கிய சம்பவ இடத்திலேயே இர்பான் அவர்களின் மனைவி சிப்னாவும் சிறிது நேரத்தில் அவரின் தாயாரும் வபாத்தனதாக சம்பவத்தில் இருந்தவர்கள் எமது நிருபர்களிடம் கூறியுள்ளார்கள்.இருந்தும் இவர்கள் உடனடியாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
மேற்படி சம்பவத்தில் மின் தாக்குதலுக்கு உள்ளான 7 வயது பிள்ளை தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் எமக்கு தெரியவந்துள்ளது.
இவர்களின் ஜனாஸா நேற்று இரவு (வியாழன்) 9 மணியளவில் மடவளை பஸார் ஜாமியுல் கைராத் ஜும்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக