சனி, 30 நவம்பர், 2013

(படங்கள் இணைப்பு) 19 வயது மாவனல்லை வாலிபன் அம்ஜாத் கடுகன்னாவையில் அகால மரணமடைந்த சம்பவம். (accident)
19 வயது மாவனல்லை வாலிபன் கடுகன்னாவையில் அகால மரணம்  

மாவனல்லை மகவத்தையைச் சேர்ந்த பாடசாலை பஸ் சாரதியான ராஸிக் என்பவரின் மகனான 19 வயதுடைய் அம்ஜாத் அகால மரணமானார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )

இவர் கண்டியில் ஒட்டோமொபைல் பயின்று வருகிறார்  இன்று மாலை 2013.11.30 தனது வகுப்பினை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் கடுகன்னாவ பள்ளத்தில் இறங்கும்போது பஸ் வண்டி ஒன்றை முந்தி செல்கையில் கீழே விழுந்துள்ளார்.

அதன்போது  எதிரே வந்த கார் இவரின்உடம்பில் ஏறியதுடன் தலைப்பகுதி நொருங்கியுள்ளது

 இதனால் வாலிபன் ஸ்தலத்திலே வபாத்தாகியுள்ளார் இச்சம்பவம் இன்று மாலை 2013.11.30  சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோதுண்ட இரு வாகனங்களும் தப்பிச்சென்றதாகவும் பின்னர் மாவனல்லைப் பொலிஸின்முயற்சியால் பஸ்வண்டியை தேடிப் பிடித்ததாகவும் ஜனாஸாவின் தந்தை சற்று முன் எமக்குத் தெரிவித்தார்.

 ஜனாஸா இன்னும் மாவனல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகள் முடிந்தால் இன்று இரவு 11.30 மணிக்கு மாவனல்லை ஹிங்குலோயா ஜும்மா பள்ளிமையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக