
மாத்தளை வைத்தியசாலை பகுதியில் குழியொன்றில் இருந்து இதுவரை 24 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் ஒன்றை அமைக்கவென மாத்தளை வைத்தியசாலைக்கு முன்னால் கடந்த 23ம் திகதி நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மாத்தளை வைத்திய அதிகாரி, நீதவான் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவை மனித எலும்புக்கூடுகள் என தெரியவந்தது.
எலும்புக்கூடுகள் குறித்து மாத்தளை பொலிஸார் விசாரணைனகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக