கண்டி வடக்கு டிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில்
![]() |
| கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி வடக்கு டிப்போவைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். |
300 ஊழியர்கள் கடந்த 30ஆம் திகதி தொடக்கம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிற்கான கொடுப்பனவுகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை என இவ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தாமும் தமது குடும்பத்தினரும் பெரும் வாழ்வாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக