செவ்வாய், 4 டிசம்பர், 2012


அரசை தாக்க அச்சம் கொண்டு ஊடகங்கள் என்னை தாக்குகின்றன - ரணில்
அரசை தாக்க அச்சம் கொண்டு ஊடகங்கள் என்னை தாக்குகின்றன - ரணில்



அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட அச்சம் கொண்டுள்ள ஊடகங்கள் தனக்கு எதிராக செய்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   

அவ்வாறு ஊடகங்கள் தன்னை தாக்குவதற்கு தான் எவ்வித தவறும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர், 


பிரதம நீதியரசர் குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊடகங்கள் இன்று பிரதம நீதியரசருக்கு எதிராக செய்தி வெளியிடுகின்றன. குறிப்பாக அரச ஊடகங்கள் அவரை கடுமையாக விமர்சிக்கின்றன. சில தனியார் ஊடகங்களும் அவ்வாறே.

இது மிகவும் பாரதூரமான நிலை. அரச ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிடுவது பிரச்சினைக்குறியதாகும். அரசாங்கம் பிரதம நீதியரசரை விரட்ட முயற்சிப்பதாகவே அது கருதப்படும். எனவே இது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் பத்திரிகைகளுக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும் என தெரிவித்ததோடு, எதிர்கட்சித் தலைவரின் கருத்து குறித்து கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக