சனி, 21 ஜூன், 2014

யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.



யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நள்ளிரவு (20.06.2014) 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிiயில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவ்விடம் வந்த யாழ் பொலிஸார்,இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை இப்பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதி தினமும் இராணுவத்தினரின் ரோந்து அணி அடிக்கடி செல்லும் பகுதி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
(farook sihan)

NOLIMIT Store in Panadura has been burnt down





சனி, 30 நவம்பர், 2013

(படங்கள் இணைப்பு) 19 வயது மாவனல்லை வாலிபன் அம்ஜாத் கடுகன்னாவையில் அகால மரணமடைந்த சம்பவம். (accident)
19 வயது மாவனல்லை வாலிபன் கடுகன்னாவையில் அகால மரணம்  

மாவனல்லை மகவத்தையைச் சேர்ந்த பாடசாலை பஸ் சாரதியான ராஸிக் என்பவரின் மகனான 19 வயதுடைய் அம்ஜாத் அகால மரணமானார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )

இவர் கண்டியில் ஒட்டோமொபைல் பயின்று வருகிறார்  இன்று மாலை 2013.11.30 தனது வகுப்பினை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் கடுகன்னாவ பள்ளத்தில் இறங்கும்போது பஸ் வண்டி ஒன்றை முந்தி செல்கையில் கீழே விழுந்துள்ளார்.

அதன்போது  எதிரே வந்த கார் இவரின்உடம்பில் ஏறியதுடன் தலைப்பகுதி நொருங்கியுள்ளது

 இதனால் வாலிபன் ஸ்தலத்திலே வபாத்தாகியுள்ளார் இச்சம்பவம் இன்று மாலை 2013.11.30  சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோதுண்ட இரு வாகனங்களும் தப்பிச்சென்றதாகவும் பின்னர் மாவனல்லைப் பொலிஸின்முயற்சியால் பஸ்வண்டியை தேடிப் பிடித்ததாகவும் ஜனாஸாவின் தந்தை சற்று முன் எமக்குத் தெரிவித்தார்.

 ஜனாஸா இன்னும் மாவனல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகள் முடிந்தால் இன்று இரவு 11.30 மணிக்கு மாவனல்லை ஹிங்குலோயா ஜும்மா பள்ளிமையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

துபாய்  Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு  தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு)

கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான 'அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்' டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

தற்போது துபாய் டியூட்டி ப்ரீயில் 51 நாடுகளை சேர்ந்த 6௦௦௦ பேர் பணி புரிகிறார்கள்.கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது(Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc) 

இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.(தயவு செய்து எமக்கு மெயில் அனுப்ப வேண்டாம்)

சம்பளம் 4500 AEDஇல் (160 800 இலங்கை ரூபா ) இருந்து ஆரம்பிக்கும்.உலகின் மிகப்பெரும் விமான நிலையத்தில் வேலை செய்யப்போவது நீங்களாககூட இருக்கலாம்

முயற்சி செயங்கள்! வெற்றி நிச்சயம்!







சனி, 9 நவம்பர், 2013

(படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு) நேற்று கின்னஸ் சாதனை செய்த நீர்கொழும்பு திருமணம். 


கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடை பெற்றது.
இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி சிறிவர்தன முன்னெடுத்தார்.
அவரது ‘மணாளியன்கே மஹகெதர’ (மணப்பெண்ணின் தாய் வீடு) என்னும் அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு புகழும் கீர்த்தியும் பெற்றுக்கொடுக்கும் முகமாக அவர் இந்த சாதனையில் இறங்கியுள்ளார்.
நிசன்சலா மற்றும் நளின் இணைந்த இத்திருமணத்தில் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய (126 ) மணப் பெண் தோழிகளும், தோழர்களும் இதில் இடம்பிடித்தனர்.
இத்திருமண வைபவத்திற்கு முதற் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியா ருமான ஷிரந்தி ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஆகக்கூடியதாக தாய்லாந்திலேயே 96 மணப் பெண் தோழிகள் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சம்பி சிறிவர்தனவே ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளே தானே அலங்கரித்து கின்னஸ் பதிவேட்டில் இடம் பிடித்தனர்.

வெள்ளி, 29 மார்ச், 2013

பெபிலியான (Fashion Bug) பெஷன்பக் மீது நேற்று இரவு மேட்கொள்ளப்பட்ட தாக்குதலின் முழு வீடியோ

செவ்வாய், 5 மார்ச், 2013


தெஹியங்க அல் அஸ்ஹார் மத்திய மகா வித்தியாலயதின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி ( இறுதித்தினம் )


முதலிடம் :-   உமர் லெப்பை இல்லம்  
இரண்டாம் இடம் :-  ஜின்னா இல்லம் 
மூன்றாம் இடம் :-  மஹ்மூத் இல்லம் 

இம்மூன்று இல்லத்துக்கும் தெஹியங்க நியூஸ் இன் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...