ஒக்டோபரில் மாத்திரம் 13 பேர் உயிரிழப்பு
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கம் காரணமாக இந்த மாதத்தில் மாத்திரம் எட்டு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
வௌ்ளம் காரணமாக மேலும் இருவரும் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.
காலி, ஹபராதுவ பகுதியில் இன்று முற்பகல் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக