வெளி வந்தது வின்டோஸ் - 8. ஒரு அமெரிக்க நண்பரின் விமர்சனம் இதோ.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வின்டோஸ் - 8 நேற்று அமெரிக்காவில் வெளிவந்தது. அமெரிக்காவில் வசிக்கும் Ravi Nag என்ற முகநூல் நண்பரின் விமர்சனம் தான் இது..
வின்டோஸ் - 8 ஆஹா என்ன ஒரு புது அனுபவம். நிறைய அனுமானங்களை பின் தள்ளி விட்டது. நேற்று கரெக்டாக மைக்ரோசாஃப்டிலிருந்து ஈ மெயில் வந்தது சரியாக இரவு 12 மணிக்கு டவுன்லோட் செய்யலாம் என்று.
அதில் முக்கியமாக ப்ரமோ கோட் கொடுத்திருந்தார்கள். அதாவது ஒரிஜினல் விலையை காட்டு $39 (இந்திய மதிப்பில் 1999/- ஆனால் ப்ரொசீட் பன்னுங்கள் கடைசியில் பேமென்ட் ஆப்ஷனில் ஆஃபர் கோட் இருக்கிறதா என்று கேட்கும் அங்கே இந்த கோடை போட்டால் $12 டாலர் தான் (699).
முக்கிய நல்ல விஷயம் இதை டவுன்லோட் செய்யும்போது நாம் கம்ப்யூட்ட்ரை இயக்க முடியும். கரென்ட் கட் ஆனாலோ அல்லது இன்டர்னெட் டவுன்லோட் தடைபட்டாலோ எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்தில் இருந்து ரெஸ்யூம் செய்ய முடியும்.
pause வசதி இருப்பதால் நிறுத்தி நிறுத்தி கூட டவுன்லோட் செய்யலாம். எனக்கு டவுன் லோட் (2ஜிபி) சுமார் 16 நிமிடங்களில் ஆனது.
இந்திய 512 - 2 எம்பி கனெக்ஷனில் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் வரை ஆகலாம் அவ்வளவுதான். பின்பு டெஸ்க்டாப்பில் வின்டோஸ் அப்டேட் என்று ஐகான் வரும்.
வந்த பிறகு அதை சொடுக்கினால் உடனே டவுன்லோட் அஸிஸ்டென்ட் சொல்லும் - உங்களின் இத்தனை அப்ளிகேஷன் வேலை செய்யும் இத்தனை அப்ளிகேஷனுக்கு வின்டோஸ் 8 வேலை செய்யது என்று ஒரு பட்டியலை கொடுக்கும். சில அப்ளிகேஷன் முக்கியமாக இருந்தால் நீங்கள் வின்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ய இயலாது. எது போனாலும் பரவாயில்லை எனக்கு வின்டோஸ் 8 வேனும்னா கன்டினியு செய்தால் உடனே கம்பாடபிளிட்டி இல்லாத அப்ளிகேஷன் எல்லாம் அன் இன்ஸ்டால் செய்ய ஆரம்பிக்கும்.
அப்புறம் ஒரு 1 மணி நேரம் இண்ஸ்டாலேஷன் கம்ப்ளீட் அன்ட் கூல். இதை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை விட டச் ஸ்க்ரீனில் யூஸ் பண்ணினால் டபுள் ஒகே.
ஆப்பிளின் வழிக்கு வந்துவிட்டது மைக்ரோசாஃப்ட் - ஏன் என்றால் ஆப்ஸ், ஸ்கை டிரைவ், எல்லாம் அதே சாயல். இது மைக்ரோசாஃப்ட் டேப்ளட் சர்ஃபேஸ்க்கு சேர்த்து உருவானதால் நிறைய டேப்ளட் மாதிரி இருக்கு.
இன்ஸ்டால் செய்த அடுத்த 30 - 45 நிமிஷம் நிலாவில் இறந்தியது போல் ஒரே கன்ஃபியூஷன் ஆஃப் இந்தியா ரகம். அப்பூறம் இந்த பட்டனை அமுக்கி அந்த அபட்டனை அமுக்கி கத்துகிறதுக்குள்ளே 1 மணீ நேரம் ஆச்சு.
ஆனா ஈஸி. அது போக இது 10 வருஷத்திற்க்கு முன்பு வந்திருந்தால் எல்லா தாய்மார்களும் இந்தியாவில் ஐடி ஜீனீயஸ் ஆகிருக்கலாம் அப்படி ஒரு ஈஸி பியூச்சர்.
இந்த மொசைக் கல் டிஸைன் பக்கம் பிடிக்கலைனா பழைய மாதிரி டெஸ்க்டாப்பை மாற்றலாம். வெரி ஈஸி சோஃபார் மோர் டீட்டெயில் சூன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக