நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடும் மழை
நாட்டின் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் கடும் மழை பெய்துள்ளது.
இதற்கமைய லக்ஷபானவில் 88.5 மில்லிமீற்றரும், கெம்பியனில் 38 மில்லிமீற்றரும், சமனல வாவியில் 29.5 மில்லிமீ்ற்றரும், மவுஸாகலையில் 23 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.
பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று மாலை திறந்துவிடப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக