அதிர்ச்சி படங்கள் இணைப்பு. கமராவில் சிக்கியது தப்பிச் செல்ல முயன்ற வெலிக்கடை கைதிகள் சுட்டுக் கொல்லப்படும் காட்சி.
முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற மூன்று சிறைக் கைதிகள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்றிரவு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை வெடித்த கலவரத்தினைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியேறி முச்சகர வண்டி ஒன்று மூலமாக தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் சம்பவ இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் கமரொவில் பதிவாகியுள்ளன.
கீழேயுள்ள படங்களில் தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதையும் கைதி ஒருவர் கீழே விழுவதையும் முச்சகர வண்டியினுள் ஏறிய நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதையும் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக