வெலிக்கடை கலவரத்தில் உயிரிழந்த நௌபர். இவரின் சடலத்தை இதுவரை உறவினர்கள் பொறுப்பேற்காத நிலை.
வெலிக்கடை சிறைக்கலவரத்தின்போது உயிரிழந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் ரம்சதீன் நௌபர் எனும் கைதியின் சடலத்தை இதுவரை அவரது உறவினர்கள் பொறுப்பேற்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இவரது சடலம் உட்பட மேலும் 4 கைதிகளின் சடலங்கள் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைக்கலவரத்தின்போது படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 27 கைதிகளில் இருவர் முஸ்லிம்களாவர்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த முஹமட் சலாகுதீன் அஸ்வர்தீனின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக