வியாழன், 15 நவம்பர், 2012


வெலிக்கடை சிறையில் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பெற்ற சிம் அட்டைகள் மற்றும் கைதிகளுடன் தொடர்பும் அம்பலம்.

வெலிக்கடைச் சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்புகளைப் பேணிய நபர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சிறைச்சாலையில் கண்டு பிடிக்கப்பட்ட செல்லிடப் பேசி சிம் அட்டைகளின் மூலும் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. கைதிகள் அடிக்கடி தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இந்த சிம் அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அருகாமையில் உள்ள தொலைபேசி கோபுரங்களின் தரவுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின் போது இந்திய கைதிகளிடமிருந்தும் சில செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு கைதிகளுடன் தொடர்புகளைப் பேணிய அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக