களுத்துறை பெற்றோரின் இழிச்செயல். மதுவுக்கு அடிமையானவர்கள் மகளுக்கும் மதுவை பருக்கும் போது போலீசில் சிக்கினர்.
தாங்களும் மதுவை அருந்திவிட்டு போதை தலைக்கேறியதன் பின்னர் தங்களுடைய ஒரேயொரு மகளுக்கும் மதுவை பருக்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற குறித்த சிறுமியின் தந்தை தனது மனைவியுன் இணைந்து மது அருந்தியுள்ளார்.
இளம் தம்பதியினரான அவ்விருவரும் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதை தொடர்ந்து தங்களுடைய ஒரேயொரு மகளான ஒன்பது வயது மகளுக்கும் மதுவை பலவந்தமாக பருக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பெற்றோரை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தினர்.
பெற்றோரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் தமிந்த ராமநாயக்க வெலிகொடபிட்டிய ஒன்பது வயது சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பணித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக