வியாழன், 15 நவம்பர், 2012


சுங்கத்தீர்வு அதிகரிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட எதிரொலி. மாருதி முதல் கனரக வாகனங்களின் விலைகள் அதிகரித்தன.

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சுங்கத்தீர்வை அதிகரிக்கப்பட்டதால், சகல வகையான வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத்சந்திர தெரிவித்தார்.
இதன் பிரகாரம் வாகனங்களின் விலை 2 இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு இடையிலும் சிறியரக காரான மாருதி 2 இலட்சம் ரூபாவினாலும் டொயோட்டா விட்ஸ் 2 இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டரை இலட்சம் ரூபாவிற்கும் இடையிலும்  அதிகரித்துள்ளன.
இதேவேளை, வான் மற்றும் லொறி ஆகியவற்றின்  விலைகள் 4 இலட்சம் ரூபாவினாலும் 5 தொன் எடையுடைய வாகனங்களின் விலைகள் 4 இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபாவினாலும்  வரையிலான விலையில் அதிகரித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக