கஹவத்தை மர்மக் கொலைகள் விவகாரம். இதுவரை 14 சம்பவங்களில் 16 பெண்கள் கொலை. கொலையாளி ஒருவரா?
கஹவத்தையில் தனிநபர் ஒருவரது பின்னணியிலேயே தொடர்ச்சியாக பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக பலரிடமும் காணப்படும் சந்தேகத்தினை பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி, திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமது தனிப்பட்ட தகராறுகளுக்கும் ஒரே பாணியை கையாளும் கொலையாளிகள், தனிநபர் ஒருவரே அனைத்து கொலைகளையும் முன்னெடுப்பது போன்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கஹவத்தையில் இறுதியாக இளம் கணவன் மற்றும் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தடயங்களும் கைவசமிருப்பதாகவும் சந்தேகநபர்கள் பற்றிய இரகசியங்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் அம்பலத்திற்கு கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.
தகவல் ஊடகத்துறையமைச்சில் நேற்றுக் காலை கஹவத்தையில் இடம்பெற்றுவரும் மர்மக் கொலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளி க்கும் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டபோதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 14 சம்பவங்களில் 16 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக ஏற்றுக்கொள்ளப் படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக