நேற்று 1026 கம்பளை ஜினராஜ கல்லூரி மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம். என்ன காரணம்? (படங்கள் இணைப்பு)
கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (14.11.2012) காலை விஷக்கிருமியின் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் இரு ஆசிரியைகள் உட்பட 126 மாணவிகள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இக்கிருமியின் பாதிப்புக்குள்ளாகிய 1026 மாணவிகள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதிலும் இதில் 900 மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இக்கல்லூரியின் புதிய வகுப்பறைக்கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் இருந்த 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு உடலில் அரிப்பு, தலைச்சுற்று மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலை புதன்கிழமை தொடக்கம் மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளதாக கம்பளை வலய கல்விப் பணிமனை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீரகோன் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..
தெள்ளுப்பூச்சிகளினாலேயே மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக் கப்பட்டாலும் உடலரிப்பு மயக்கத்திற் கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கம்பளை பொதுச் சுகாதார பரிசோதகர் ருவன் சுமனசேக்கர தெரிவித்தார்.
கல்லூரியின் ஒவ்வொரு வகுப்பறையிலுமுள்ள தலா 5 அல்லது 6 மாணவர்களுக்கு மட்டுமே இவ்வாறு உடலரிப்பு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார, அதிகாரியினர் தலைமையில் குழுவொன்று பாடசாலைக் கட்டடத்தில் ஆய்வுகளை நடத்திய போதும் தெள்ளுப்பூச்சிகளோ அல்லது மைட்டாக்களோ இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரிக்கு அருகே சற்று தொலைவில் ஆஸ்பத்திரியின் மலசலக் குழி இருப்பதால் இதிலிருந்து ஏதேனும் கிருமிகள் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து அதில் தேங்கி நிற்கும் நீரையும் ஆய்வு கூடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி சுமன சேக்கர தெரிவித்தார்.
மேலும் இரண்டு தினங்கள் பாடசாலை மூடப்படுவதுடன் கட்டடங்கள் உட்பட சுற்றுப்புற சுழல் துப்புரவு செய்யப்பட்டு தடுப்பு மருந்துகளும் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலகம் தெரிவிக்கிறது.
மேலும் இப்பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இதேவிதமான பாதிப்புக்குள்ளாகிய எட்டு மாணவிகள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர் என்றும் தெரிய வருகின்றது.
இம்மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியமைக்கான காரணம் இதுவரை திட்டவட்டமாக இனங்காணப்படாத நிலையில் கம்பளை நகர சபை மற்றும் கம்பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, நேற்று இரவுக்குள் கம்பளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மிகுதி மாணவிகளும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக