அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் தீக்கிரையான பள்ளிவாசல் அகற்றப்படவுள்ளது. பெரிய பள்ளிவாசல் ஒன்றே போதுமானதாம்.
அநுராதபுரம் மல்வத்து ஓயா தக்கியா பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவுள்ளதாக அநுராதபுர மேயர் எச.டி. சோமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவிருந்த நிலையில் அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் காடையர் குழுவொன்றினால் தீயிடப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அநுராதபுர மேயர் தொடர்ந்து கூறுகையில்,
அநுராதபுரம் மல்வத்தை லேன் பகுதி புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்குள்ள மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கான வீடுகள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் நிர்மாணிக்கப்படுகிறது. அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதும் இப்பகுதி வாழ் மக்களுக்கு வழங்கப்படும்.
அப்போது பள்ளிவாசல் அகற்றப்படும். அநுராதபுரம் மக்களுக்கு இங்குள்ள பெரிய பள்ளிவாசல் போதுமானது.
அதுவரை இப்போதுள்ள பள்ளிவாசலுக்கு தேவையான வசதிகளை வழங்கி வருகிறோம் எனவும் அநராதபுர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் : நவமணி பத்திரிகை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக