காலியில் நேற்று நடந்த 4 இளைஞர்களின் கொலை. பின்னணியில் இரு குழுக்களிடையே நடக்கும் மோதல்கள். (படங்கள் இணைப்பு)
காலி போத்தல பிரதேசத்தில் நேற்றுக் காலை இளைஞர்கள் நால்வரினது சடலங்களை பொலி ஸார் மீட்டுள்ளனர்.
கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப் பட்ட நிலையிலேயே இந்நான்கு சடல ங்களும் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
போத்தல பொலிஸ் பிரிவிற்குட் பட்ட பலகொட, வல்பிட்ட வத்த, மஹஜோன் கால்வாய்க்கருகிலிருந்தே இச்சடலங்களை பொலிஸார் நேற்று மீட்டனர். மீட்கப்பட்டுள்ள நான்கு சடலங்களிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதனால், இவர்கள் துப்பாக்கியால் சுட்டே கொல்லப் பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலியில் ஒருவர் கை மற்றும் கால் வெட்டப்பட்ட நிலையில் வீதியில் வைத்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். இவரது கொலையுடன் தொடர்புபட்டிருந்த சந்தேக நபர்களே நேற்று சடலமாக மீட்கப்பட்டிருக்கலாமென பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலையின் பின்னணியில் இரு குழுக்களிடையே மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன என்ற உண்மை தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்..
இக்கொலைகளுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யும் நோக்கில் விசேட பொலிஸ் குழுவொன்று காலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் போத்தல பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
பிந்திக் கிடைத்த செய்தியடிப்படையில் இக்கொலைகளுக்கு காரணமானவர்களென்ற சந்தேகத்தின் பேரில் அக்மீமனை பொலி ஸார் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. போத்தலயில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் அக்மீமனை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் கொனமுள்ள பிரதேசத்திலிருந்த சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
பொலிஸார் இதுகுறித்து மேலும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக