400 ஹஜ் பயணிகளுடன் திரும்பிய ஏர் இந்திய விமானம். தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்.
இந்தியா:
400 ஹஜ் பயணிகளுடன் திரும்பிய ஏர் இந்திய விமானமொன்று கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் நேற்று இரவு 10.45 மணிக்கு அவசர தரையிறக்கம் கண்டது.
தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அவசரத் தரையிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புகை எச்சரிக்கும் கருவி திடீரென்று பழுதடைந்திருந்தது பின்னர் தெரியவந்துள்ளது. இது 747 போயிங் வகை விமானமாகும்.
ஜெத்தாவிலிருந்து 400 பயணிகளுடன் கொல்கத்தா வந்த விமானம் வழக்கமான நேரத்திற்கு அரைமணிநேரம் முன்னதாகவே அவசரத் தரையிறக்கம் கண்டது என்றும் சிறு தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்றும் அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளனர் என்றும் விமான நிறுவனத் தகவல்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக