அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தப் போகும் இலங்கை. தேவையான இடத்திற்கு மாத்திரம் மழை.
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி தேவையான இடங்களுக்கு மாத்திரம் மழையை பெற்றுக் கொடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது குறித்து சீனாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை கொள்ளையடிக்கும் அரச உத்தியோகத்தர்கள் குறித்து ஆராய விசேட பிரிவை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக