அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றி. ஒபாமாவுக்கு ஆதரவாக 274 தேர்தல் சபை உறுப்பினர்கள் ஓட்டு
பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. இதில் ஜனாதிபதி ஒபாமா வெற்றிபெற்றார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா, இரண்டாவது முறையாக என்னை தேர்வு செய்ததற்கு அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் அமெரிக்க அதிபராக 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறவேண்டும். அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமெரிக்க நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு கென்டக்கி, இண்டியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
அதிபர் பதவிக்கான முடிவை தீர்மானிக்கும் புளோரிடா, ஒஹயோ, வர்ஜீனியா மாநிலங்களில் காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவாக 274 தேர்தல் சபை உறுப்பினர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதனையடுத்து அவர் எளிதில் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு 203 தேர்தல் சபை உறுப்பினர்களின் ஓட்டு மட்டுமே கிடைத்ததால் அவர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் அமெரிக்கா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக