சனி, 3 நவம்பர், 2012


கலேவல யில் புத்திர பாக்கியம் கேட்டு ஒரு மந்திரவாதியின் உதவியை நாடிச் சென்ற யுவதி.
கலேவல பொலிஸ் பிர தேசத்தில் தனக்கு புத்திர பாக்கியம் கேட்டு ஒரு மந்திரவாதியின் உதவியை நாடிச் சென்ற ஒரு 20 வயது இளம்பெண்ணுக்கு அந்தப் பாக்கியத்தை எனது மந்திர சக்தியின் மூலம் பெற்றுத் தருகிறேன் என்று ஒரு பெண் மந்திரவாதி உறுதிமொழி அளித்திருக்கிறான்.
இந்தப் பெண்ணை பெண் மந்திரவாதி தனக்கு தெரிந்த ஒரு (ஆண்) மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மந்திரவாதியும் அந்தப் பெண்ணும் தனியாக இருந்த போது மந்திரவாதி அந்தப் பெண்ணுடன் தகாத உறவு கொள்ள முயற்சித்த போது அவள் கத்தி ஊரையே கூட்டி அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டாள்.
பின்னர் அந்தப் பெண், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது பெற்றோருடன் சம்பவம் பற்றி முறைப்பாடு செய்திருக்கிறாள். பொலிஸாருக்கு அஞ்சி சம்பந்தப்பட்ட மந்திரவாதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஒரு வாக்குமூலம் அளித்துவிட்டு தனக்கு உதவி செய்த பெண் மந்திரவாதியுடன் தலைமறை வாகிவிட்டான்.
இந்த சம்பவத்தை அடுத்து விரக்தி நிலையில் உள்ள பாதிப்பிற்குள்ளான அந்தப் பெண்ணுக்கு இன்னுமொரு மந்திரவாதியின் உதவியைப் பெற்றுக்கொள்ள கணவனும், பெற்றோரும் முயற்சிகளை எடுத்து வருகின்ற செய்தி இது போன்றவர்கள் என்ன நடந்தாலும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு உதாரணமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக