அவள் என்னை ஏமாற்றினாள். அதனால்தான் அவள் முகத்தை சிதைத்து பழிவாங்கினேன். நேற்று காலியில் 26 வயது பெண்மீது ஆசிட் தாக்குதல்.
தன்னை காதலித்து ஏமாற்றியதாகக் கூறி பெண்ணொருவர் மீது காதலித்து ஏமாந்ததாகக் கூறப்படும் காதலன் அசிட் வீசி தாக்குதல் நடத்தி பழிவாங்கியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை காலி - உடுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உடுகமையில் இருந்து காலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் குறித்த பெண் பயணித்துக் கொண்டிருந்த வேளை, ஏமாற்றப்பட்ட இளைஞர் அசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான 26 வயதுடைய பெண் காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்கென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அசிட் வீசப்பட்டபோது பஸ்ஸில் பயணித்த மேலும் 5 பெண்களும் பஸ் நடத்துனரும் சிறு எரிகாயங்களுக்கு உள்ளாகி உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசிட் வீசிய சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் உடுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக