இலங்கைக்கு வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அமெரிக்க மாட்டிறைச்சி. ஹராம், ஹலால் பார்ப்பது எமது கடமை.
அமெரிக்க மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதுமட்டுமன்றி அமெரிக்க உற்பத்திப் பொருட்களை பரவலான வீச்சில் ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இறைச்சி சந்தை, 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்பொழுது பொருளாதாரம் மற்றும் அரசியல் காலநிலை நிறுவப்பட்டுள்ளதனால் இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வலய சந்தைகளில் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதித் தலைவர் ஜொயில் ஹக்கார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.இலங்கையில் தற்போது பொருளாதார அபிவிருத்தி மேம்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையும் புத்துணர்வு பெற்றுள்ளது. மொத்த தேசிய உற்பத்தி 8 சதவீதமாக இருக்கின்றனது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்ததாக ஜொயில் ஹக்கார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கையின் அங்காடிகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த அமெரிக்க மாட்டிறைச்சியை கொள்வனவு செய்வதில் முஸ்லிம்களின் நிலை என்பது அனைவருக்கும் வரும் கேள்வியே.
குறிப்பிட்ட இறைச்சி ஒருவேளை அகில இலங்கை ஹலால் சான்றிதழை பெறும் பட்சத்தில் இதை நுகரலாம் என ஒருசிலர் கருத்து தெரிவித்தாலும் அமெரிக்க பொருள் எனும்போது இவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக தளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளதை காணக் கூடியதாய் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக