வெள்ளி, 2 நவம்பர், 2012


முஸ்லிம் சமூகம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மூலமே சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் - முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன்



முஸ்லிம் சமூகம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மூலமே சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியுமென முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
Add caption
வெலிகம அரபா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெண் பிள்ளைகள் பருவமடைந்தால் எப்படியாவது திருமணத்தை செய்து கொடுத்து தன் கடமையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்'டுமென்றே எண்ணமே ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோருக்கும் இருந்தது. எனினும் அந்த நிலையில் எமது சமூகம் தொடர்ந்திருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இந்தச் சமூகத்தின் ஒரே விமோசனம் கல்வியேயாகும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பும்இ இருப்பும் கல்வியிரேயே தங்கியுள்ளது.

முனடபொரு காலத்தில் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த எமது முஸ்லிம் சமூகத்தின் நிலை எதிர்மறையாக உள்ளது. இன்று நடைபாதை வியாபாரமும்இ சில்லறை வியாபராமுமே முஸ்லிம்களின் கைகளில் உள்ளது. முஸ்லிம்கள் என்றாலே அவாகள் மாணிக்கக் கற்கள் வியாபரிகள் என்ற நிலை காணப்பட்டது. இன்று அதுவும் எம்மிடம் இல்லை. இந்நிலையில் வியாபாரத் துறையில் நாம் மீண்டும் முன்னேற வேண்டுமாயின் அதற்கும் கல்வியே அவசியமாகிறது.

எவ்வளவு சிரமப்பட்டாலும் எமது பிள்ளைகளுக்கு கல்வியை கொடுத்தால் மாத்திரமே எமக்கு விமோசனம் உண்டு. உலகத்தின் இன்றைய தேவைக்கு ஏற்ப கல்வியை எங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும. சில நேரங்களில் நூற்றுக்கணக்கான சான்றிதழ்கள் இருந்தாலும் தொழில்களை பெற முடியாது இருக்கின்றது. அப்படியானால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றைய சவாலை எதிர்கொள்ளக்கூடிய கல்வியை வழங்க வேண்டும. இந்தப் பொறுப்பினை ஆசிரியர்களால் மட்டும் செய்ய முடியாது இதற்கு ஒரு சமூகப் பொறுப்பு அவசியமாகிறது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக