சனி, 3 நவம்பர், 2012


வெளியிடப்பட்டது ஐபிஎல் 6 இல் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியல். 179 வீரர்களின் ஒப்பந்தமும் நீடிப்பு.


பெங்களூர்: ஐபிஎல் தொடரின் 6வது சீசனில் கலந்து கொள்ள உள்ள அணிகளில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஐபிஎல் தொடரில் ஆடிய 179 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 15 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 6வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள ஒவ்வொரு அணிகளிலும் ஆட உள்ள வீரர்கள் மற்றும் நீக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமுள்ள 9 அணிகளில் ஏற்கனவே ஆடிவரும் 179 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களை தேர்வு செய்யவில்லை.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கும் முன் அணிகள், வீரர்களை ஒப்பந்தம் செய்ய குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அதன்படி வரும் 6வது சீசனில் வீரர்களை ஒப்பந்தம் செய்ய அதிகபட்சமாக ஒவ்வொரு அணிகளும் ரூ.12.5 மில்லியன் வரை செலவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 வெளிநாட்டு வீரர்களுடன் மொத்தம் 33 வீரர்களை ஒவ்வொரு அணியும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை குறிப்பிட்டுள்ள ஒப்பந்த தொகையில் ரூ.9,325,435 செலவு செய்து 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 15 வீரர்களின் ஒப்பந்தங்களை நீடித்துள்ளது. மீதமுள்ள வீரர்களின் தேர்விற்கு ரூ.3,174,565 பயன்படுத்தி கொள்ளலாம்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம் வருமாறு:
டோணி, முரளி விஜய், அல்பி மார்கல், பென் ஹில்பின்ஹஸ், வெய்ன் பிராவோ, டூ பிளெசிஸ், மைக்கேல் ஹஸ்ஸி, குலசேகரா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஷாகிப் ஜாக்தி, ஸ்ரீகாந்த் அனுரூதா, பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா, விரிதிமன் ஷா.
ஒப்பந்தம் விடுக்கப்பட்ட வீரர்கள்: ஜார்ஜ் பெய்லி, டக் போலிஞ்சர், ஜோஜிந்தர் சர்மா, சுரஜ் ரன்திவ், யோ மகேஷ், அபினவ் முகுந்த், ஸ்காட் ஸ்டைரிஸ், சுதீப் தியாகி, விக்னேஷ், வாசுதேவதாஸ்.
ஹைதராபாத்:
சன் டிவி குழுமம் வங்கியுள்ள ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட அணியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 20 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த அணியின் நிர்வாகம் மொத்தம் ரூ.5,496,304 நிதியை செலவு செய்துள்ளது. மீதமுள்ள வீரர்களை தேர்வு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையில் ரூ.7,003,696 மீதம் வைத்துள்ளது.
ஹைதராபாத் அணியில் இடம் பெற்று வீரர்கள் பின்வருமாறு:
குமார சங்கக்காரா, ஜீன் பால் டும்மினி, டேல் ஸ்டைன், ஜூவன் திரேன், காமரூன் ஓயிட், கிறிஸ் லின், அபிஷேக் ஜூஞ்ஜூன்வாலா, ஆகாஸ் பாந்திரி, அக்ஷாத் ரெட்டி, அமித் மிஸ்ரா, ஆனந்த் ராஜன், அங்கிட் சர்மா, ஆஷிஸ் ரெட்டி, பாரத் சிப்லி, பிப்லாப் சமந்தரே, ரவி தேஜா, பார்த்தீவ் பட்டேல், ஷிகர் தவன், வீர் பிரதாப் சிங்.
ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள்:
டாரன் பிராவோ, டேனியல் கிறிஸ்டியன், கேதார் தேவ்தார், மன்பிரீத் கோனி, டேனியல் ஹரீஸ், இஷாங் ஜாகி, அட்சூதா ராவ், தன்மே மிஸ்ரா, சயீது குவாத்ரி, ஸ்நேஹா கிஷோர், சன்னி சோஹல், தன்மே சீனிவாஸ்தவா, அர்ஜூன் யாதவ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 22 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டது. மீதமுள்ள வீரர்களை ஏலம் எடுக்க ரூ.2,133,696 நிதியை வைத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 19 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.5,280,435 நிதியை செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7,219,565 நிதியை பயன்படுத்தி மற்ற வீரர்களை தேர்வு செய்யலாம்.
டெல்லி டேர்டெவில்ஸ்:
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 18 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,824,891 நிதி செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள வீரர்களை ஏலம் எடுக்க ரூ.1,675,109 நிதி உள்ளது.
புனே வாரியர்ஸ்:
புனே வாரியர்ஸ் அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 24 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8,537,174 நிதியை அந்த அணி நிர்வாகம் செலவு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 14 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4,076,739 நிதியை அந்த அணி நிர்வாகம் செலவிட்டுள்ளது. மீதமுள்ள வீரர்களை ஏலம் எடுக்க ரூ.8,423,261 மீதம் வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்களின் தேர்வு முடிந்துவிட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் ஆடிய 7 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 27 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,691,739 நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 20 வீரர்களின் ஒப்பந்தங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9,712,609 நிதி செலவிடப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்ட வீரர்களை தவிர, மீதமுள்ள வீரர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி வரை காலகெடு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது இந்திய அணியில் ஆடி வரும் வீரர்களையோ, ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களையோ தேர்வு செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக