ஞாயிறு, 16 டிசம்பர், 2012


மக்களிற்கான எச்சரிக்கை! 
வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம்

மக்களிற்கான எச்சரிக்கை! வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம்
வெற்றுக் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம் என ஆதர் சீ கிளாக் மத்திய நிலையம் பொதுமக்களிற்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

இந்நாட்களில் வானில் ஏற்படும் மாற்றத்தினை பொதுமக்கள் ஆர்வத்துடன் வெற்றுக் கண்களால் பார்த்து வருவதாகவும் இதன் காரணமாக பார்வை கோளாறு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வானில் மர்மப் பொருள் தெரிதல், எறி கல் விழுதல் உள்ளிட்ட பல மாற்றங்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறுவதாக வானிலை கட்டுப்பாட்டு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. 

சூரியனில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறாத நிலையில் மக்கள் அச்சமடைந்து வெற்றுக் கண்களால் சூரியனை பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக