காலநிலை காரணமாக பரீட்சை எழுத தவறிய மாணவர்களிற்கு விசேட பரீட்சை
இம்முறை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் மற்றும்
அழகியற்கலை பாட பரீட்சைகளை எழுதத்தவறிய மாணவர்களுக்காக விசேட பரீட்சை
நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் இப்பரீட்சைகளிற்கு முகங் கொடுக்கவில்லை என்பதன் காரணமாகவே இவ் விசேட பரீட்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக