பொதுமக்கள் சேவையில் வர்ணமயமான பஸ்கள்
பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளை வர்ணங்கள் மூலமாக வேறுபடுத்தி காட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை அமர்வின் போது போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.இதன்படி தனியார் போக்குவரத்து பஸ்கள் இளம் நீல நிற வர்ணத்தையும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் சிவப்பு நிற வர்ணத்தையும் கொண்டமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் வான்கள் மஞ்சள் வர்ண பூச்சை பூச வேண்டும்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் வான்கள் மஞ்சள் வர்ண பூச்சை பூச வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக