செவ்வாய், 11 டிசம்பர், 2012

வடக்கு, தெற்கு சட்டத்தரணிகள் வேலை நிறுத்தத்தில்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவென அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடத்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (11) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
வடக்கு, தெற்கு சட்டத்தரணிகள் வேலை நிறுத்தத்தில்


இன்று தொடக்கம் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த வேலை நிறுத்தம் தொடரும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் நான்கு நாட்களுக்கு யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட சட்டத்தரணிகள் கடமையில் ஈடுபட மாட்டார்கள். 


இதேவேளை, காலி மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மேலும் நாளைய தினம் ஒரு மணித்தியாலத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கப் போவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக