தாய், மகள் கொலைச் சம்பவ சந்தேகநபர் கடத்தல்
கஹவத்த, கொடகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் கொலைச் சம்பவம் தொடர்பில்
குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இனந்தெரியாத குழு ஒன்றினால்
கடத்தப்பட்டுள்ளார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னதாக கம்பஹா, ஹேனேகம பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக